Home இலங்கை அரசியல் ராஜித சேனாரத்னவின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு

ராஜித சேனாரத்னவின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பினனர் இன்று (13)  நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மிக முக்கிய சகாவாகவும் இருந்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர (Premalal Jayasekara) மீளப்பெற்றுள்ளதுடன், அவர் மீண்டும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் வாரம் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/mp-rajitha-senaratne-s-support-to-the-president-1723559038

NO COMMENTS

Exit mobile version