Home இலங்கை அரசியல் அவமரியாதைக்குரிய மொழி பயன்பாடு! சபாநாயகரின் விசேட உத்தரவு

அவமரியாதைக்குரிய மொழி பயன்பாடு! சபாநாயகரின் விசேட உத்தரவு

0

நாடாளுமன்ற  அமர்வுகளின் போது சில எம்.பி.க்கள் பயன்படுத்திய நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழி பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் குறித்த விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு முரணான மொழி

 நாடாளுமன்றத்திற்கு முரணான மொழியைப் பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிலையியல் கட்டளை 82.1 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய இத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சபாநாயகர், நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியது குறித்து விசாரிக்குமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version