Home சினிமா நடிக்க வருவதற்கு முன் நடிகை மிருனாள் தாகூர் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

நடிக்க வருவதற்கு முன் நடிகை மிருனாள் தாகூர் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ

0

மிருணாள் தாகூர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பலரும் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், சாய் பல்லவி, விஜய் சேதுபதி, ஷாருக்கான் ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அப்படி சின்னத்திரை சீரியல்களில் நடித்து பின் வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக மாறியிருப்பவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி சினிமா மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்த மிருணாள் தாகூர் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார்.

ஆனால், ரசிகர்களின் மனதை தொடும் அளவிற்கு வரவேற்பை பெற்று தந்த படம் சீதா ராமம் தான். கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் வெற்றியினால் Hi நானா, கல்கி, Gumraah என தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்பை மிருணாள் தாகூர் பெற்றார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 45 படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாகூர் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

பலரும் பார்த்திராத புகைப்படம்

பாலிவுட் சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வரும் நடிகை மிருனாள் தாகூர், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் தனது பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் எப்படி இருந்துள்ளார் என பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், மிருனாள் தாகூர் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட சில புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், நடிகை மிருனாள் தாகூரா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

You May Like This Video

Source: https://cineulagam.com/article/mrunal-thakur-before-coming-to-acting-photo-viral-1731663873

NO COMMENTS

Exit mobile version