Home இலங்கை சமூகம் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் ஆபத்தான பொருட்கள்

0

அண்மையில் இந்தியாவின் (India), கேரள கடற்கரையில் விபத்துக்குள்ளான எம்எஸ்சி எல்சா 3 (MSC Elsa 3) கப்பலில் 13 ஆபத்தான கொள்கலன்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை சுற்றுச்சூழல் அமைச்சின் அமைச்சின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அந்த அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எச். எம். பி. அபேகோன் (R.H.M.P. Abeykoon) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த கப்பலில் உள்ள சில பொருட்கள் தற்போது இலங்கை கடற்கரைகளில் கரையொதுங்கியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரையொதுங்கும் பொருட்கள்

இந்த நிலையில், நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த கப்பலில் உள்ள பொருட்கள் இலங்கை கடற்கரைக்கு மேலும் கரையொதுங்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கரையொதுங்கும் பொருட்களை அகற்றும் பணிகள் இன்று (13) முதல் தொடங்கப்படும் என அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கி வருவதாக நேற்று (12) தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version