Home சினிமா முகமூடி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி ஹீரோ! யார் தெரியுமா

முகமூடி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி ஹீரோ! யார் தெரியுமா

0

மிஸ்கின்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மிஸ்கின். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சைக்கோ திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து பிசாசு 2 படத்தை இயக்கினார்.

இப்படம் சில காரணங்களால் இதுவரை வெளிவரவில்லை. அதே போல் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விஷாலுடன் ஏற்பட்ட மனகசுப்பினால் வெளியேறினார். மேலும் தற்போது விஜய் சேதுபதியை வைத்து Train எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முகமூடி. இப்படத்தின் மூலம் தான் நடிகை பூஜா ஹெக்டே திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியை சந்தித்தது.

முதல் ஹீரோ

இந்த நிலையில் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜீவா கிடையாதாம். நடிகர் சூர்யா தான் இப்படத்தின் முதல் ஹீரோ என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக ஜீவாவை கமிட் செய்துள்ளனர் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/mugamoodi-movie-first-hero-is-not-jiiva-1720496122

NO COMMENTS

Exit mobile version