Home இலங்கை அரசியல் NPP கொழும்பு மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய இரகசியத்தை அம்பலபடுத்திய முஜிபுர் ரஹ்மான்

NPP கொழும்பு மாநகர சபை ஆட்சியை கைப்பற்றிய இரகசியத்தை அம்பலபடுத்திய முஜிபுர் ரஹ்மான்

0

நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு கொழும்பு மாநகர சபையின் மேயராக முடியாது.அதை புரிந்து கொள்ள முடியாத அரசாங்கம் தான் இருக்கிறது.ஜனாதிபதி செயலகத்தால் வழிநடத்துபவர்கள் சிறுப்பிள்ளைத்தனமாக சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர் என்று முஜுபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் அவரிடம் தொடுத்த கேள்விகளுக்கு பதலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூரிய கருத்துக்கள்,

கொழும்பு மாநகர சபையில் என்ன நடந்தது

இவர்கள் உண்மையான பிரச்சினையை மறைத்தே செயற்படுகின்றனர்.கொழும்பு மாநகர சபையின் மேயர் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பத்தில் பலாத்காரமாக இரகசிய வாக்கெடுப்புக்கு அரசாங்கம் சென்றது.

அப்போது நாங்கள் அனைவரும் பகிரங்க வாக்களிப்பை கோரினோம்.ஆனால் உள்ளுராட்சி ஆணையாளரை கொண்டு உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளாமல் அடாத்தாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தினர்.

 

அதற்காக உறுப்பினர்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கினர்.அதன் ஊடாக ஆட்சியை கைப்பற்றினர்.ஆனால் பகிரங்க வாக்கெடுப்பில் கொடுத்த வாக்குறுதிகளை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றலாம்.ஆனால் பொய் சொல்லி ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

   

NO COMMENTS

Exit mobile version