முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம்(13) இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் விளையாட்டுத்துறை மேம்பாடு
தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்தல், முல்லைத்தீவு நகரில் மணிக்கூட்டுக்
கோபுரம் அமைத்தல், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட
வெள்ளப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்ட விவகாரத்திற்கு
உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
