Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

0

இலங்கை ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சார்பில் வாழ்த்து
தெரிவிக்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் சம்மேளன உபதலைவரும் வடமாகாண
கூட்டுறவு சங்கங்களின் சமாச உபதலைவருமான வி.அருள்நாதன் முல்லைத்தீவு
ஊடக அமையத்தில் இன்று (30) நடத்திய சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாட்டின் ஐனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மக்கள் சார்பில் நாட்டினை
நல்லமுறையில் கொண்டுசெல்வதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்திய இழுவைப்படகுகள்

முல்லைத்தீவு கடலில் இனிவரும் காலத்தில் இறால் பருவம் தொடங்கவுள்ளது. இதற்கு இந்திய இழுவைப்படகுகள் இடையூறாக இருந்ததனால் எமது வாழ்வாதாரம்
பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.

இதனை விட முன்னாள் கடற்றொழில்
அமைச்சரிடம் நாங்கள் வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரின் முயற்சியால் கைதுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐனாதிபதி தான் தற்போது கடற்றொழில் அமைச்சராக இருப்பதன் காரணமாக அவரிடம்
சில கோரிக்கையினை வைக்கின்றோம்.

இந்திய இழுவைப்படகு மட்டுமன்றி இலங்கையில் சட்டவிரோதமான தொழில்கள், அங்கீகரிக்கப்படாத தொழில்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை
கட்டுப்படுத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை

ஆகவே இந்த ஐனாதிபதி இலஞ்சம் ஊழல் போன்ற விடயங்களில் அக்கறையாக செயற்பட்டு
வருகின்றார். எமது பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து  கடலினைக் காப்பாற்றி எமது சந்ததிகள் வாழவேண்டிய நிலையினை ஏற்படுத்தி தரவேண்டும்.

கடற்றொழில் அமைச்சர்  

எங்கள் கடலில் சட்டவிரோத தொழில்களை நிறுத்தி சட்டரீதியான தொழிலை கொண்டு
வரவேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் கடற்றொழிலாளர்களுக்கு
நவீனமயமாக்கல் தொழில் வலுவினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் நவீன தொழில் செய்வதாக இருந்தால் துறைமுகம் இல்லை ஏனைய துறைமுகங்களை
நம்பி தொழில் செய்ய முடியாது. இதற்கு முதல் இருந்த கடற்றொழில் அமைச்சர் நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக 30
வீத சட்டவிரோத தொழில்களை நிறுத்தியுள்ளார். நீரியல் வள திணைக்களத்தினை
சரியான முறையில் செயற்படுத்தியுள்ளார்.

தற்போது கடலில் சுருக்குவலை பாவிப்பதாக தொலைபேசியூடாக தகவல் வந்து
கொண்டிருக்கின்றது. ஆகவே ஐனாதிபதி இந்த விடயத்தில் கவனம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இந்திய இழுவைப்படகு தொடர்பிலான கோரிக்கை
எங்கள் கடற்படையினர் எவ்வாறு எல்லையில் நின்று தடுக்கின்றார்களோ அதேபோல்
இந்திய கடற்படையினரும் இருக்கின்றார்கள். அவர்கள் எங்கே இருக்கின்றார்கள்.

புதிய ஐனாதிபதி

எங்கள் கடலுக்கு வருவதற்காக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்
எங்கள் கடலில் வந்து வளத்தினை அழிப்பதற்கு அவர்கள் எவ்வாறு ஆர்ப்பாட்டம்
செய்வார்கள்.

இந்தியாவில் முழு வளத்தினையும் அழித்துவிட்டார்கள்.

அங்கிருந்து வரும் படகுகள் இலங்கை கடலுக்கு
போவதென்றால் மட்டும் தொழிலுக்கு வாங்கோ என்று கேட்டு தொழிலாளர்களை
திரட்டுகின்றார்கள். அங்குள்ள எம்.பிமாரின் படகுகள் தான் இங்கு வருகின்றன. அங்கும் இந்திய இழுவைப்படகுகள் வேண்டாம் என்று தமிழ்நாட்டின் சில இடங்களில்
ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.

ஆகவே ஐந்து ஆண்டுகளுக்கு நல்ல ஐனாதிபதி வந்துள்ளார். எங்கள் கடற்றொழில் மக்களின்
பிரச்சினைகள் அனைத்தையும் நிறுத்தி தருவார் என்ற நம்பிக்கை உண்டு“ என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version