Home இலங்கை சமூகம் ஆட்சி மாறினாலும் தீர்வினை வழங்கப்போவதில்லை: முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

ஆட்சி மாறினாலும் தீர்வினை வழங்கப்போவதில்லை: முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

0

எங்கள் நாட்டில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்பதால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி கருத்து தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்றலில் நேற்றைய தினம்(20) இடம்பெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“புதிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வழங்கப்போவதில்லை என்பதுடன்
குற்றம் புரிந்தவர்களை காப்பாற்றக்கூடியவர்களே மீண்டும் வருவார்கள்.

அவ்வாறு ஜனாதிபதியாக வருபவர்கள் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றில்
நிறுத்தினால் நாங்கள் அவர்களை வரவேற்போம்.

எனினும், குற்றம் புரிந்தவர்களுக்கு துணையாய் நிற்பவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஆட்சேபனை இல்லை, எங்களுக்கான தீர்வு கிடைக்காது
என்பதுதான் உண்மை.

அத்துடன், சர்வதேச குற்றவியல் கூட்டில் குற்றவாளிகளை நிறுத்தும் வரை
எங்களுக்கான தீர்வினை யாரும் தரப்போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version