Home இலங்கை அரசியல் முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளரை வரவேற்ற மக்கள்

முல்லைத்தீவில் தமிழ் பொது வேட்பாளரை வரவேற்ற மக்கள்

0

முல்லைத்தீவில் (Mullaitivu) பிரசார நடவடிக்கைகளுக்காக சென்ற தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை (Ariyanethran) மக்கள் வரவேற்றுள்ளனர்.

குறித்த வரவேற்பு நிகழ்வு இன்றையதினம் (30.08.2024) பழைய முறிகண்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

இதற்கமைய, அங்கு சென்ற அரியநேந்திரன் பொது மக்களுடன் இணைந்து வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்

அதனைத் தொடர்ந்து பிரசார நடவடிக்கையையும் அவர் ஆரம்பித்துள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/mullaitivu-people-welcome-ariyanethran-1725016369

NO COMMENTS

Exit mobile version