Home இலங்கை சமூகம் இரண்டாவது நாளாகவும் தொடரும் முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டம்

0

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரின் பொறுப்பற்ற  செயற்பாடு காரணமாக
முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் பழைய  மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று(24) இரண்டாவது நாளாகவும்
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய உடற்கல்வி
ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய பாட வேலைகளில்
பாடங்கள் நடைபெறுவதில்லை என்றும் இங்கு நடைபெறுகின்ற ஊழல் முறைகேடுகளுக்கு
எதிராகவும் குறித்த போராட்டம் நேற்று(23) காலை பாடசாலை முன்றலில்
முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம்

இந்த நிலையில் பெற்றோர்களின் போராட்டம் நடைபெற்ற சம நேரத்தில் பாடசாலை
மாணவர்களும் அதிபர் அலுவலகம் முன்பாக குறித்த ஆசிரியர் இடமாற்றத்தை இரத்து
செய்யுமாறு கோரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தைச் சமரசம் செய்வதற்காக நேற்று வலைய கல்வி திணைக்களத்தில் இருந்து
வந்த உதவி கல்விப் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் குறித்த
பிரச்சனைக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் நேற்று மாலை வரை போராட்டம்
நடைபெற்றது.

வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகளும் பாடசாலை அதிபரும் பொலிஸ்
பாதுகாப்புடன் பாடசாலையில் இருந்து வெளியேறி சென்றனர்.

பொறுப்பற்ற செயற்பாடு

இதன் தொடர் போராட்டமாக இன்று காலையும் குறித்த போராட்டம் நடைபெற்று
வருவதுடன் மாணவர்களின் வரவு குறைவாக உள்ளதுடன் பாடசாலைக்கு வருகை தந்த
மாணவர்களும் நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக துணுக்காய் வலயக் கல்வி பணிப்பாளர்  நேற்று
முதல் தற்போது வரை தொடர்பு கொள்ளப்பட்ட முற்பட்டபோதும் தொடர்பு கொள்ள
முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version