முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று (18) யாழ்ப்பாண பல்கலைக்கழக
வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தூபியில்
இடம்பெற்றது.
இந்தநிகழ்வானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலி
இந்த நினைவேந்தலின் போது ஈகைச் சுடர் ஏற்றி மலர் தூவி இறுதி யுத்தத்தில்
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள, ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து
கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பல்வேறு பகுதிகளில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்.சிவகுமாரனின் திருவுருவச்
சிலைக்கு அருகாமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி
வழங்கப்பட்டது.
கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கட்சியின்
உறுப்பினர்கள் இணைந்து இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கினர்.
