இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கு
முன்னதாகவே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக போராடியது.
1945 ஆம் ஆண்டு
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் தேசிய
இனத்திற்கு எதிராக முன்னெடுத்த பேரினவாதக் கொள்கை தமிழ் தேசிய இனப்
போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
மகிந்த அரசாங்கம்
அகிம்சை வழியில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக
போராட்டங்களை தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கண்டு
கொள்ளாததன் விளைவாக இளைஞர், யுவதிகள் தற்காப்பு யுத்தம் என்ற பெயரில்
உரிமைக்காக ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை உருவாகியிருந்தது.
அந்த ஆயுதப்
போராட்டத்தை பயங்கரவாத யுத்தமாக காண்பித்து சர்வதேச நாடுகளின் துணையுடன்
மகிந்த அரசாங்கம் 2009 மே 18 மௌனிக்கச் செய்திருந்தது.
21 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பாரிய மனித பேரவலமாக முள்ளிவாய்கால் மண்
மாறியது. போர் விதிமீறல்கள், மனித உரிமை மீறல்கள் என ஒட்டுமொத்த உலகமும்
வெட்கித் தலைகுனியும் அளவுக்கு அந்த போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள்
பதிவாகின.
ஒட்டுமொத்த தமிழ் மக்களினது மனங்களிலும், மனித உரிமையை மதிப்பவர்கள்
மத்தியிலும் அந்த கனங்களை ஜீரணிக்க முடியாது.
பலர் குடும்பம் குடும்பமாகவும்,
குடும்பங்களின் உறவுகளும், பிள்ளைகள், அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, அப்பா,
அம்மா என பலர் தமது உறவுகளை இழந்ததும் முள்ளிவாய்காலில் தான்.
மே 18 முள்ளிவாய்கால் நினைவேந்தல்
இன்று காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகள் 3000 நாட்களை தாண்டி போராட்டத்தை நடத்துவதற்கும் அந்த மண்
தான் காரணம். இன்று அந்த வேதனைகளை கடந்து 16 ஆண்டுகள் முன்னோக்கிச்
சென்றுவிட்டோம்.
ஆனாலும், அந்த நாளை தமிழ் மக்கள் மறக்கவில்லை என்பதை மே 18 முள்ளிவாய்கால்
நினைவேந்தல் நிகழ்வுகள் படம்போட்டு காட்டியிருக்கின்றது.
அந்த நாள் ஒரு
சரித்திரமாக பதிவாகியிருக்கின்றது. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப்
பிரதேசத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், கொழும்பிலும் முள்ளியவாய்கால்
நினைவேந்தல் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில்
பிரதான நினைவுத் திடலில் அஞ்சலி நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.
கடந்த காலத்தை விட இம்முறை அஞ்சலி நிகழ்வில் கலந்த கொண்டோர் தொகை அதிகமாகவே
இருந்தது.
அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அங்கு வந்த மக்கள்
தாம் இறுதி யுத்தில் பதுங்கியிருந்த இடங்களையும், தமது உறவுகளை இழந்த
இடங்களையும் தேடி அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுது தமது துயரத்தை
வெளிப்படுத்தக் தொடங்கி விட்டனர்.
முள்ளிவாய்கால் நினைவுத் தூபி
இதனால் அந்தப் பகுதி ஒரு சோகம் நிறைந்த
புனிதமான பகுதியாகவே காட்சியளித்தது. மிகவும் உணர்வு பூர்வமாக மக்களால் அந்த
நாள் அனுஸ்டிக்கப்பட்டு குருதியால் தோய்ந்த அந்த மண் கண்ணீர் மழையால்
நனைந்தது. தமிழ் மக்களின் உரிமைக்காக காெடுக்கப்பட்ட அதிகபட்ச இழப்பே இது.
தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகாெலை நடந்தேறியது என்பதுக்கு சாட்சியம்
முள்ளிவாய்கால் பேரவலமே.
இதேபோன்று, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ்,
டென்மார்க், பெல்ஜியம் மற்றும் இந்தியா போன்ற புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும்
தேசங்களிலும் இந்த நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
அத்துடன் நடைபெற்ற
மனிதப் பேரவலத்துக்கு நீதி கோரிய துவிச்சக்கர வண்டிப் பயணமும் இடம்பெற்றது.
பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றதுடன் பிரித்தானிய
பிரதமரிடம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி மனுவும் கையளிக்கப்பட்டது.
கனடாவில் பிரம்டன் மாநிலத்தில் முள்ளிவாய்கால் நினைவுத் தூபியும் இனப்படுகொலை
என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அது தற்போது இராஜதந்திர
வட்டாரங்களில் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
தமிழ் மக்கள்
பாேர் முடிந்து 16 ஆண்டுகள்
கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் இலங்கையில் நடந்தது இனப்படுகாெலை தான்
என்பது அங்கீகாரம் பெற்று வருகின்றமை இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது.
ஆக, ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் ஒரு இனப்படுகொலை நாளாக மே 18
அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நாள் தமிழ் மக்களின் உரிமைக்காக
மடிந்தவர்களின் புனித நாள். தமிழ் மக்களின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒரு
துயர நாள். இந்த நாளை தூய்மையாகவும், புனிதமாகவும் அரசியல் கலப்பின்றி தமிழ்
தேசிய இனம் தொடர்ந்தும் அனுஸ்டிக்க வேண்டும்.
அதுவே மடிந்த ஆத்மாக்களுக்கு
செய்யும் பரிகாரமாக அமையும் என்பதே உண்மை.
