Home இலங்கை அரசியல் முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் தொடருந்து என்று பெயர் வைக்கப்படுமா : எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் தொடருந்து என்று பெயர் வைக்கப்படுமா : எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி

0

பருத்தித்துறையிலிருந்து (Point Pedro) முல்லைத்தீவு (Mullaitivu) ஊடாக திருகோணமலைக்கு எக்ஸ்பிரஸ் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என ரணில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முள்ளிவாய்க்கால் எக்ஸ்பிரஸ் தொடருந்து என பெயர் வைக்கப்படுமா என தான் சம்பந்தனிடம் கேள்வியெழுப்பியதாக தமிழ் தேசிய பேரைவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Shivajilingam) தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் தலைவர்கள் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) சந்தித்த போது மகிந்த சொல்லிதான் நான் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாக பொய்யுரைக்கப்பட்டதுடன் மகிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிவிட்டு தான் அவரை சந்திக்க சென்றதாக அடிக்கடி சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்திருந்தார்.

மேலும் மகிந்தவிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் நான் வலியுறுத்தினேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/8t5BRcmfG5s

NO COMMENTS

Exit mobile version