Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்தில் இன்றும் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ்ப்பாணத்தில் இன்றும் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று(18) பல்வேறு பகுதிகளில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்.சிவகுமாரனின் திருவுருவச்
சிலைக்கு அருகாமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்(eprlf) கட்சியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி
வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திய மக்கள்

கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்(suresh premachandran) மற்றும் கட்சியின்
உறுப்பினர்கள் இணைந்து இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கினர்.

மக்கள் உணர்வுபூர்வமாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியதை
அவதானிக்க முடிந்தது.  

NO COMMENTS

Exit mobile version