Home இலங்கை சமூகம் கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

0

ஈழத்தமிழர்களின் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நேற்றைய நினைவேந்தலில் வடக்கு கிழக்கு எங்கிலும் இருந்து.ஒரு பெரும் திரட்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தமிழர்தாயக மக்கள் மீளவும் தமிழ் தேசியத்திற்கு ஒரு ஆணையை வழங்கியதும் அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் ஒரு மக்கள் திரட்சியை மிகப்பெரிய நிலையில் வெளிப்படுத்திய அதே சமகாலத்தில் இத்தனை ஆண்டுகளாய் தமிழினம் எதிர்பார்த்திருந்த சர்வதேச அங்கீகாரம் கைகூடி வருவதான ஒரு சமிக்ஞை வெளிப்பட்டிருக்கிறது.

பிரித்தானியா , கனடா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு புதிய அடைவை எட்டியிருப்பது
ஈழத்தமினத்தின் புலம்பெயர் அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்த சமிக்ஞைகளை வைத்து ஈழத்தமிழினம் எப்படியான அடைவுகளை அறுவடை செய்யவேண்டும் என்பது தொடர்பாக முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு..

https://www.youtube.com/embed/tlrsWcWooAA

NO COMMENTS

Exit mobile version