Home இலங்கை சமூகம் கல்முனை மாநகர சபை காவலாளி வீதி விபத்தில் பலி!

கல்முனை மாநகர சபை காவலாளி வீதி விபத்தில் பலி!

0

மருதமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இவ்விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் என தெரியவருகிறது.

மேலதிக விசாரணை

கடமை முடிந்து பெரியநீலாவணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையிலே விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version