Home இலங்கை குற்றம் சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர சம்பவம்! தேடுதல் வேட்டையில் சிக்கிய பொருட்கள்

சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர சம்பவம்! தேடுதல் வேட்டையில் சிக்கிய பொருட்கள்

0

காலி புஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர், கூரான ஆயுதம் ஒன்றினால் 11 தடவைகள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் அங்கு ஏராளமான ரவுட்டர்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகள்

போதைப்பொருள் விவகாரம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரே குற்றவாளியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version