Home இலங்கை சமூகம் யாழில் நடைபெறவுள்ள மாபெரும் இசைப் போட்டி

யாழில் நடைபெறவுள்ள மாபெரும் இசைப் போட்டி

0

யாழ் (Jaffna) இசைக் கலையகத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடளாவிய
ரீதியிலான இசைப் போட்டியானது யாழ். கண்டி வீதியில் அமைந்துள்ள திருமறைக்
கலாமன்றத்தில் நாளை (25) காலை ஆரம்பிக்கபடவுள்ளதாக அதன் தலைவர் செல்வ ரவிசங்கர்
தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியானது இலங்கையில் வாழுகின்ற 16 வயதிற்கும் 35 வயதிற்கும்
இடைப்பட்ட இசை ஆர்வலர்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக அமைந்துள்ளது.

பல
இசைக்கலைஞர்கள் இலை மறை காயாக மறைந்துள்ள நிலையில் அவர்களை வெளியுலகிற்கு
எடுத்து காட்டும் முயற்சியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

மூன்று வெற்றியாளர்கள்

குறித்த போட்டி நிகழ்வுகளில் ஏற்கனவே விண்ணபித்தவர்களும் அதுதவிர போட்டி
தினமாகிய நாளை, புதிதாக இணைய விரும்புபவர்கள்  நேரடியாக
போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

இதேவேளை நாளைய தினம் இடம்பெறவுள்ள போட்டிகளில் தெரிவு செய்யபடுவோர் அடுத்த
போட்டிகளுக்கு அழைக்கப்படுவர்.

இறுதிப்போட்டி ஏப்ரல் மாதமளவில் இடம்பெறும்.

குறித்த போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறும் மூன்று வெற்றியாளர்களுக்கு
பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

மேலும் தென்னிந்திய இசைக் கலைஞர்களை
தாண்டியும் சுதேசிய இசைக் கலைஞர்களை வளர்ப்பதே இந்த போட்டியின் நோக்காக உள்ளது
என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version