Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் கடையடைப்பு : வெளியான முஸ்லிம்களின் நிலைப்பாடு

தமிழரசுக் கட்சியின் கடையடைப்பு : வெளியான முஸ்லிம்களின் நிலைப்பாடு

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் கடையடைப்பு அழைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளது. இதனை ஒருபோதும் நாங்கள் ஏற்கத் தயாரில்லை என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

வடக்கும் கிழக்கும் முஸ்லிம் மற்றும் தமிழர் தாயகம் என்று கூட கூற முடியாத, திராணியற்ற தமிழரசுக் கட்சிக்கு எவ்வாறு நாங்கள் ஆதரவளிப்பது என்றும் யஹியாகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுத்திருக்கும் கடையடைப்பு அழைப்பை

கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த தமிழரசுக் கட்சி கடையடைப்புக்காக முன்வைத்த காரணிகளில் ஒன்று கூட முஸ்லிம் சமுகம் சார்பாக எதையும் முன்வைக்கவில்லை.

முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களில் எத்தனையோ பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.

ஆகக் குறைந்தது கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு சாதகமான களநிலவரம் இருக்கும் போது கூட அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் தமிழரசு கட்சியுடன் பிரதேச சபைகளை கைப்பற்ற ஒன்றுபடும் தமிழரசுக் கட்சியுடன் இணையும் முஸ்லிம் காங்கிரஸ் குறித்து மக்கள் விழிப்பாகவே உள்ளனர்.

எனவே  நாளை மறுநாள்  தமிழரசுக் கட்சி விடுத்திருக்கும் கடையடைப்பு அழைப்பை முஸ்லிம் சமுகம் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு அரசாங்கத்தை சங்கடத்துக்கு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இதனை எமது கட்சி நோக்குவதாகவும் யஹியாகான் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version