திருகோணமலை முத்துநகர் விவசாயிகளை சீனக் குடா காவல்துறையினர் இன்று(11) கைது செய்துள்ளனர்.
குறித்த விவசாயிகள் முத்துநகர் வயல் நில பகுதியின் சூரிய மின்சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்தும் போது அத்துமீறி தனியார் காணிக்குல் நுழைந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகளின் போராட்டங்கள்
அண்மையில் விவசாய காணி அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் சத்தியாக் கிரக போராட்டத்தை குறித்த முத்துநகர் விவசாயிகள் நடாத்தி வருகின்றனர்.
தற்போது தனியார் காணி எனவும் உரக் கம்பனி ஒன்றுக்கு சொந்தமான காணி எனவும் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இச்சம்பவம் இடம் பெற்றதாக கண்டறிப்பட்டள்ளது.
அண்மையில் நாடாளுமன்றிலும் ஊடகங்களிலும் முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு தொடர்பில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில், எஞ்சிய காணியில் விவசாயம் செய்யலாம் என ஆளுங் கட்சி பிரதியமைச்சர் பேசியதால் நெற்செய்கைக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/embed/0bHzPfgzX7o
