Home இலங்கை சமூகம் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அநுர! போராட்டத்தில் இறங்கிய முத்து நகர் விவசாயிகள்

திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள அநுர! போராட்டத்தில் இறங்கிய முத்து நகர் விவசாயிகள்

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  சீனக் குடா விமான
நிலையத்தில் இன்று (18)நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக திருகோணமலைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில
அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியாக் கிரகப் போராட்டம்

திருகோணமலை
மாவட்ட செயலகம் முன்பாக 32 ஆவது நாளாகவும் தொடர் சத்தியாக் கிரகப்
போராட்டத்தில் ஈடுபட்ட முத்து நகர் விவசாயிகளும் ஜனாதிபதியை சந்தித்து தங்களது
விவசாய நிலங்களுக்கான தீர்வை முன்வைக்க கோரி வீதிக்கு இறங்கியுள்ளனர்.

மக்கள் போராட்ட முன்னணி, அகில இலங்கை விவசாய சம்மேளனம் ஆகியன இணைந்தும்
விசேடமாக குறித்த கவனயீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version