Home இந்தியா இந்தியாவில் அதிவேகமாக கரையில் வந்து மோதிய பாரிய கப்பல்! அலறியடித்து ஓடிய மக்கள்

இந்தியாவில் அதிவேகமாக கரையில் வந்து மோதிய பாரிய கப்பல்! அலறியடித்து ஓடிய மக்கள்

0

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ‘MV Nawata Bhum’ எனும் பாரிய சரக்குக் கப்பல் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் கரையில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது, நேற்றையதினம்(13) காலை சுமார் 11:00 மணி அளவில் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட கப்பல், மலேசியாவின் கிளாங் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எச்சரிக்கை ஒலி 

விபத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கப்பலின் திசைக் கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்ட திடீர் கோளாறு மற்றும் ஆற்றின் பலத்த நீரோட்டம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பல் கரைநோக்கிச் செல்லும் போது மாலுமி தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பியதால், அருகில் இருந்த படகுத்துறையினர் மற்றும் மக்கள் உயிர்தப்பியதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இழுவைப் படகுகள் மூலம் குறித்த கப்பல் மீட்கப்பட்டு தற்போது தனது பயணத்தை தொடர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Source: https://ibctamil.com/article/mv-nawata-bhum-shipwreck-india-1786616685

NO COMMENTS

Exit mobile version