Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நாடாளுமன்றுக்கு பிரவேசிக்கும் கரு பரணவிதான

0

Courtesy: Sivaa Mayuri

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவின் இடத்துக்கு கரு பரணவிதான நியமிக்கப்படவுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கட்சியின் பட்டியலின் அடிப்படையில் அவருக்கு அந்த இடம் கிடைக்கவுள்ளது.

முன்னதாக தலதா அத்துகோரள தமது பதவியை விட்டு விலகுவதாக இன்று(21) அறிவித்தார்.

அமைச்சு பதவிகள்

ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிரிந்து செயற்படுவதன் காரணமாகவே தாம் தமது பதவியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்சி மாறல்களும், அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அலி சாஹிர் மௌலானாவுக்கும், வடிவேல் சுரேஸூக்கும் அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளன. 

Source: https://tamilwin.com/article/karu-paranavidhana-entering-parliament-1724260948

NO COMMENTS

Exit mobile version