Home இலங்கை குற்றம் வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு! பொலிசார் பலகோணத்தில் விசாரணை

வவுனியாவில் இரத்தக்கறைகளுடன் சடலம் மீட்பு! பொலிசார் பலகோணத்தில் விசாரணை

0

வவுனியா, காத்தார் சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் மர்மான  நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம்
இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு சென்ற
பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேபகுதியை சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞரின் சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம்
கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீவிர விசாரணை

இதேவேளை உயிரிழந்த இளைஞர் நேற்றயதினம் மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில்
ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு
பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version