Home இலங்கை சமூகம் அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

0

யாழ்ப்பாணம்(Jaffna) – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மர்ம பெட்டியானது அனலைதீவு கடற்றொழிலாளர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து நேற்று(16.06.2024) மீட்கப்பட்டுள்ளது.

மர்ம பெட்டி

மேற்படி மர்ம பெட்டியினுள் தொலைத்தொடர்பு கருவி ஒன்று காணப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/mysterious-box-floating-on-the-beach-jaffna-1718562852

NO COMMENTS

Exit mobile version