Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவங்கள்

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய உருவங்கள்

0

முல்லைத்தீவு (Mullaitivu) வான் பரப்பில் நேற்றையதினம் (18.06.2024) இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததையடுத்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து, முல்லைத்தீவு
மாவட்டத்தில் நேற்றையதினம் இரவு வேளை வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு
உருவம் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

அத்துடன், அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் ஒன்று விட்டு விட்டு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

வவுனியாவில் நிலநடுக்கம்

இதனை அவதானித்த மக்கள், இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில்
அச்சமடைந்துள்ளனர். 

இதேவேளை, வவுனியாவில் (Vavuniya) நேற்றிரவு 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம்
பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வுமையம் மற்றும் சுரங்கப் பணியகம்
உறுதிப்படுத்தியிருந்தது.

NO COMMENTS

Exit mobile version