Home இலங்கை சமூகம் செம்மணியில் இரவு வேளையில் கதவை தட்டிய மர்ம நபர்கள்..!

செம்மணியில் இரவு வேளையில் கதவை தட்டிய மர்ம நபர்கள்..!

0

யுத்தக்காலத்தில் இலங்கையில் இடம்பபெயர்வு சம்பவங்கள் இடம்பெற்ற போது வயது பார்க்காமல்,  எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் மக்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று அருட்தந்தை பேர்னார்ட் அல்போன்ஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எந்தவித காரணமுமின்றி மக்கள் கைது செய்யப்பட்டார்கள், மாணவர்கள் பாடசாலை போகும் வழியில் கைது செய்யப்பட்டார்கள்.வீடுகளிலிருந்த பெண்கள், கடமையிலிருந்த அரசஊழியர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

இரவிலும் கைதுகள் இடம்பெற்றன, மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டங்கள் இருந்தபோதும் கைதுகள் தொடர்ந்தன.

நள்ளிரவில் வீடுகளுக்கு சென்று பெண்களை அழைத்து வெள்ளைவான்களில் கூட்டிச்செல்வர் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு..

NO COMMENTS

Exit mobile version