Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்

மட்டக்களப்பு கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்

0

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த கடற்கரைக்கு இன்றயதினம்(17.01.2025) அதிகாலை சென்ற கடற்றொழிலாளர்கள், தாம் இதுவரையில்
அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும்,
பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இளம் நீல நிறத்தில் இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக உள்ள இந்தப் பொருள், பெரிய அளவில்
காணப்படுகின்றது. அதன் அடியில் 12 L M எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.

கடற்றொழிலாளர்கள் அனுமானம் 

இதன் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும் காணப்படுகின்றன.
இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில்
கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version