Home இலங்கை சமூகம் செம்மணி புதைகுழியை சுற்றி நோட்டமிடும் மர்ம வாகனம்

செம்மணி புதைகுழியை சுற்றி நோட்டமிடும் மர்ம வாகனம்

0

 செம்மணி புதைகுழியை நேற்றுமுன்தினம் (29) மர்மான முறையில் வாகனமொன்று நோட்டமிடுவதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழி

நேற்றுவரை குறித்த புதைகுழியில் 33 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் (29) மர்ம வாகனம் ஒன்று செம்மணியை நோட்டமிடுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

யுஹ (yuha) – 50497 என்ற வாகன இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனமே இவ்வாறு நோட்டமிட்டதை அவதானிக்க முடிந்தாக கூறப்படுகின்றது.

மர்ம வாகனம்

குறித்த வாகனத்தில் வந்தது யார்? மயானத்தின் ஒழுங்கைக்குள் சென்று அகழ்வுப் பகுதியை ஏன் நோட்டமிட வேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

மேலும், பொலிஸாரின் வாகனத்துக்கு இவ்வாறு இலக்கம் காணப்படுவதில்லை.

பல்வேறு வகையில் சித்திரவதைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தாய், சேய், சிறுவன் என பலரது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது சர்வதேச ரீதியாகவும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறு மர்ம வாகனம் குறித்த பகுதியை நோட்டமிடுவது மக்கள் மத்தியில் அச்சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version