Home இலங்கை அரசியல் சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறை..! விலகாத மர்மம்: கேள்வி எழுப்பும் எம்பி

0

2019 ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சஹ்ரான் தங்கியிருந்த ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டல் அறையில் அதற்கு முன்னர் யார் தங்கியிருந்தார்கள் என பதிவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (20.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்று கருத்துரைக்கும் ஜனாதிபதி இந்த விடயங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, தற்போது மாறுபட்ட கருத்தை வெளியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க…

https://www.youtube.com/embed/QAXtm5HIWFI

NO COMMENTS

Exit mobile version