Home இலங்கை சமூகம் 65 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம்

65 ஆண்டுகளுக்கு பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம்

0

65 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ்
செல்கின்ற வீதியிலுள்ள பிரதான பாலத்தை புதிதாக புனரமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குறித்த புனரமைப்பு பணியை வடக்கு மாகாண
ஆளுநர் வேதநாயகம் நேற்று (25.10.2024) பிற்பகல் ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959ஆம் ஆண்டளவில் ஒரு
நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்தது.

புனரமைக்க தடை

இதனால் மாரி காலம்
ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாரிகாலம் முடிவடைந்து சுமார் 6
மாதங்கள் வரை குறித்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் பயன்படுத்த முடியாது நிலை
காணப்படுவது வழமையாக இருந்தது.

இந்நிலையில், அண்மைய வருடங்களில் இதனை புனரமைப்பதற்கு பல தடவைகள்
நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள
பகுதி என்று கூறி பல வருடங்களாக குறித்த பாலத்தை  புனரமைக்க தடை விதித்திருந்தது.

இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக குறித்த பாலம் புனரமைப்பு பணி
தடைப்பட்டுக்கொண்டிருந்தது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்
கு.பிரபாகரமூர்த்தி, மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற்கொண்ட தொடர் அழுத்தங்கள்,
முயற்சிகளால் குறித்த பாலத்தை புனரமைப்பதற்க்கு வன ஜீவராசிகள்
திணைக்களம் இணங்கியது.

புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

இந்நிலையிலேயே, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி
ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகநால் குறித்த பாலத்தினை புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியை பயன்படுத்த முடியாமை காரணமாக சுமார் 7 கிலோமீட்டர்
தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்க்கு மருதங்கேணி, புதுக்காடு
ஊடாக சுமார் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/nagercoil-athrumattuvi-main-bridge-to-be-renovated-1729904244

NO COMMENTS

Exit mobile version