Home முக்கியச் செய்திகள் கொழும்பில் பட்டப்பகலில் நிர்வாணமாக மிதிவண்டியில் சென்றவர் கைது

கொழும்பில் பட்டப்பகலில் நிர்வாணமாக மிதிவண்டியில் சென்றவர் கைது

0

கொழும்பு-நீர்கொழும்பு பிரதான சாலையில் கந்தானையின் மையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக மிதிவண்டியில் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்

சந்தேக நபரின் சட்டை மற்றும் கால்சட்டை அவர் ஓட்டி வந்த மிதிவண்டியின் கைப்பிடியில் கட்டப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட 35 வயதுடைய சந்தேக நபர் கந்தானை பகுதியில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலும் பதிவான காட்சி

இந்த நபர் இவ்வாறு சவாரி செய்த விதம் அந்த நேரத்தில் சாலையில் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை காவல் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் காமினி ஹேவாவிதாரணவின் அறிவுறுத்தலின் பேரில் கந்தானை காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பரிசோதகர் திசாநாயக்க தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version