Home இலங்கை அரசியல் மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

மூடப்படவுள்ள 33 அரச நிறுவனங்கள்! அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

0

அரசுக்கு சொந்தமான மற்றும் இலாபத்தில் இயங்காத தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச தொழில் முயற்சிகளை 02 கட்டங்களாக முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கல் மற்றும் மூலோபாய ரீதியான பொருளாதார செயற்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக, குறித்த காலத்திற்கு முன்னர் ஒருசில அரச தொழில் முயற்சிகள் தாபிக்கப்பட்டது.

எனினும் அவை சமகாலத்துடன் ஏற்புடையதாக இன்மை மற்றும் சந்தைத் தேவைகளுடன் பொருந்தாமை போன்ற காரணங்களால் தொடர்ந்தும் நடத்தி செல்வதற்கு நடைமுறைக்குச் சாத்தியமற்றது என கூறப்பட்டுள்ளது.

குறைவான நிதிச் செயலாற்றுகை 

மேலும் இவை குறைவான நிதிச் செயலாற்றுகை போன்ற
காரணங்களால் செயலிழந்து காணப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது அரச சேவைகளை வழங்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குகின்ற நியதிச்சட்ட நிறுவனங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் போன்ற பல்வேறு வகைகளுக்குரிய அரச தொழில் முயற்சிகள் அரசுக்கு பெரும் சுமையாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்குப் பதிலாக, குறித்த நிறுவனத்தைக் கலைத்து முடிவுறுத்துவது பொருத்தமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த அமைச்சின்
கீழ் தாபிக்கப்பட்டுள்ள விசேட கலைத்தல் பிரிவின் மேற்பார்வையின் கீழ் முடிவுறுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version