நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
இதனை முன்னிட்டு கட்டியம் சொல்லப்பட்டதுடன், பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற வீதி உலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
Source: https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698
