Home இலங்கை சமூகம் நல்லைக் கந்தனின் பெருந்திருவிழா : எட்டாம் நாள் மாலை திருவிழா

நல்லைக் கந்தனின் பெருந்திருவிழா : எட்டாம் நாள் மாலை திருவிழா

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் எட்டாம் நாள் இன்றாகும்.

எட்டாம் நாள் திருவிழாவின் மாலைநேரப் பூஜைகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ள நிலையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வலம் வருவார்.

அலங்காரக் கந்தனின் திருவழகைக் காண ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி மஞ்ச திருவிழாவும், 20 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள்
IBC Tamil TV, LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

https://www.youtube.com/embed/xVhp2GCgxNs

NO COMMENTS

Exit mobile version