வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோஹ்சவ திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
இந்தநிலையில், பக்த அடியார்கள் சூழ இன்றையதினம் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்று காலைமுதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோஹ்சவத்தின் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இன்றில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர், தீர்த்தம் என்று நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நிறைவுறும்.
