Home ஏனையவை ஆன்மீகம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் – நேரலை

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் – நேரலை

0

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா சற்று முன்னர் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

27 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 26ஆம் திகதி மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.

அத்துடன்,  31ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு சப்பரத் திருவிழாவும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை 6.15 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 6. 15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

Source: https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-flag-hoisting-1723176451

NO COMMENTS

Exit mobile version