நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகின்றது அது நீருக்கான போராக உள்ளது இதற்கு காரணம் குறித்த பிரதேச தவிசாளர் தான் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டி இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேச சபை பகுதிக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெள்ள நீர் வர கூடாது என பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய் பகுதியில் உள்ள கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், “நல்லூருக்கும் கோப்பாய்க்கும் இடையில் பெரும் போர் வெடிக்க போகின்றது அது நீருக்கான போராக உள்ளது இதற்கு காரணம் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தான்.
வழமையாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் இருந்து ஓடும் நீர் கோப்பாய் பிரதேச சபை ஊடாக வடிந்து கடல்நீரேரியை சென்றடையும் இது தான் வழமை.
இம்முறை நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் எங்களுடைய பிரதேசத்திற்குள் வர கூடாது என அதனை மண் அணை போட்டு தடுத்து போர் பிரகடனத்தை அறிவித்துள்ளார் கோப்பாய் பிரதேச சபை தவிசாளர்.
இதொரு அருவருப்பான செயல், வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்த முனைகின்றார், தூர நோக்கற்று செயற்படும் இந்த அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருத்தக்கது இதொரு மனவருத்தத்திற்கு உரிய விடயமாகும்” என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இது முற்றிலும் தவறான கருத்து எனவும் அதனை ஏற்றுகொள்ள முடியாது எனவும் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசன் நிரோஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்ரவியூகம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/hEPscnKVrHk
