இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நாமல் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
நன்றி தெரிவிப்பு
கடந்த சில நாட்களாக பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்ததாகவும், அரசாங்கம் தலையிட்டு அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் நாமல் ராஜபக்ச சிறப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
