சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “நாமலுடன் கிராமம் கிராமமாக” நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்ச்சி இன்று (02) நொச்சியாகம பகுதியில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாமலுடன் கிராமம் கிராமமாக திட்டத்தின் முதல் நிகழ்ச்சி நொச்சியாகம பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறை
அநுராதபுரம் (Anuradhapura) ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதும், அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
முக்கிய ஆர்வலர்கள்
அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இந்த நிகழ்ச்சியில் இணைய உள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று முக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
