Home முக்கியச் செய்திகள் சிஐடியில் இருந்து வெளியேறிய நாமல்

சிஐடியில் இருந்து வெளியேறிய நாமல்

0

புதிய இணைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

முதலாம் இணைப்பு

சற்றுமுன்னர் நாமல் எம்.பி சிஐடியில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ச (Namal Rajapaksa) இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  

சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் (Daisy Forest) தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிஐடியில் முன்னிலை

அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது என்பது தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்க கடந்த 04 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/P6cfxRXx6Wc

NO COMMENTS

Exit mobile version