Home இலங்கை சமூகம் மாவை சேனாதிராஜாவிற்கு நாமல் ராஜபக்ச இரங்கல்!

மாவை சேனாதிராஜாவிற்கு நாமல் ராஜபக்ச இரங்கல்!

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல்
ராஜபக்ச (Namal Rajapaksa) மாவை சேனாதிராஜாவுக்கு (Mavai Senathirajah) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில், தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ். போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க் கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

பொதுஜன பெரமுன

இந்நிலையில், மாவை சேனாதிராஜா கடந்த (29.01.2025) உயிரிழந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச இன்றையதினம் (01.02.2025) மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும்
மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/1UCIVuNswxs

NO COMMENTS

Exit mobile version