Home இலங்கை அரசியல் அரச வாகனங்கள் தேவையில்லை: சபையில் நாமல் பகிரங்க அறிவிப்பு

அரச வாகனங்கள் தேவையில்லை: சபையில் நாமல் பகிரங்க அறிவிப்பு

0

தனக்கும் தனது சக சிறிலங்கா பொது ஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனங்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை

நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, “ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார் ஆனால் ஐ.எம்.எப் பிடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார்.

நாணய நிதியம்

ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்கு போடுவதில்லையே மற்றும் மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version