நாடாளுமன்ற, பொது நிறுவனங்கள் குழு (COPE) ஒரு நேரடி நிகழ்ச்சியை போன்றது, ஏனெனில், அந்தகுழுவுக்கு, ஆவணங்களை சமர்ப்பிக்கவும், விவாதத்திற்கு அழைக்கவும் மட்டுமே முடியும் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சி
அத்துடன், கோப் குழுவிற்கு தவறு செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை.
ஆனால் அதன் கண்டுபிடிப்புகளைக் கொண்டு ஊடக நிகழ்ச்சிகளை மட்டுமே உருவாக்க முடியும் என்றும் நாமல் கூறியுள்ளார்.
ஊழலைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்க கோப் குழு தவறிவிட்டது என்று நாமல் குற்றம் சுமத்தியுள்ளார்.
