Home இலங்கை அரசியல் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாமல்

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாமல்

0

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayaka) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் , “இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள்.

ஜனாதிபதி தெரிவு 

மக்களின் ஆணையை மதித்து, நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் உங்களுக்கு பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை (21) அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில்,  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச போட்டியிட்டு நாடளாவிய ரீதியில் 3,42781 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/namal-rajapaksa-wished-the-9th-president-anura-1727035261

NO COMMENTS

Exit mobile version