தான் முன்வைத்த சொத்துக்களுக்கு மேலதிகமாக வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தால், அவற்றை அரசாங்கம் கையகப்படுத்தி மக்களுக்கு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரிடமிருந்து வந்த சொத்து
அதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில், “எனது சொத்துக்கள் 2015 முதல் விசாரணையில் உள்ளன. அறிவிக்கப்பட்டதைத் தாண்டி ஏதேனும் இருந்தால், தயவுசெய்து அவற்றை உடனடியாக அரசாங்கம் கையகப்படுத்தி மக்களுக்கு விநியோகிக்கவும்.
என் மனைவியின் குடும்பம் என்னுடையதை விட வணிகம் சார்ந்த குடும்பம். நான் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றியுள்ளேன். என் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட சொத்துக்களிலிருந்து எனக்கு வருமானம் உள்ளது.
எனக்கு மறைக்க எதுவும் இல்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். எங்களைக் குற்றம் சாட்டியவர்களின் சொத்துக்கள் எங்களுடையதை விட அதிகம்.” என்றார்.
