அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்த மாபெரும் பேரணி நேற்றையதினம்(21.11.2025) நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பேரணியில் மக்கள் 8000 பேர் அளவில் சேரலாம் என்ற கூறப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து பின்வாங்கிய போதிலும் சுமார் 7000க்கு உட்பட்ட வரையிலான பொதுமக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காற்சட்டை அணிந்து தலதா மாளிகைக்குச் சென்றதை ஒரு குற்றமாக ஒரு பேச்சாளர் பேசியதும் அத்தோடு இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் பௌத்த மத குருமார்களை கும்பிடாமல் கைலாகு கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அங்கு முன்வைக்கப்பட்டது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கீழ்வரும் காணொளி…
