சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் நந்தினியின் குடும்பத்தை மிகவும் மோசமாக நடத்தி வருகிறார்கள் சூர்யாவின் அம்மா மற்றும் அக்கா இருவரும்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சூர்யா இருக்க அதற்கு காரணம் நந்தினியின் அப்பா தான் என சொல்லி சுந்தரவல்லி அவருக்கு பளார் என அரை விடுகிறார்.
கொந்தளித்த நந்தினி
அதன் பின் சூர்யாவின் அக்கா மாதவி நந்தினியை அடிக்க வர, அவர் கையை பிடித்து ‘நீயும் உன் புருஷனும் தான் இதற்கு காரணம்’ என சொல்லி ஒரு பளார் விடுகிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வில்லி கேங் அதிர்ச்சி ஆகிறது.
இதுநாள் வரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இருந்த நந்தினியா இப்படி மாறியது என ப்ரோமோ பார்த்து சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
