Home இந்தியா மியன்மார் – தாய்லாந்து நிலநடுக்கம்: இந்திய பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவு

மியன்மார் – தாய்லாந்து நிலநடுக்கம்: இந்திய பிரதமர் வெளியிட்ட எக்ஸ் பதிவு

0

மியன்மார் மற்றும் தாய்லாந்தில்(Thailand) ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

மியன்மாரின்(Myanmar) இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயில் இன்று (28.03.2025) 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் தாய்லாந்தின் பாங்கொக் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

மோடியின் பதிவு

இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் உருவாக்கியிருக்கும் பாதிப்புகளை கேட்டு கவலையுற்றேன். அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக இறைவனை வேண்டுகிறேன். 

அனைத்து சாத்தியமான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது. இது தொடர்பாக தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்குச் சொல்லப்பட்டுள்ளது. 

மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுடன் தொடர்பில் இருக்கும் படி வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள்

இதனிடையே, தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்காக பேங்கொக்கில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது.

அந்த எண்ணை அவர்கள் ஏதாவது அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version